‘உயிரே உயிரே’வுக்கு ஹன்சிகா தந்த ஒத்துழைப்பு!

‘உயிரே உயிரே’வுக்கு ஹன்சிகா தந்த ஒத்துழைப்பு!

கட்டுரை 29-Mar-2016 3:39 PM IST VRC கருத்துக்கள்

முன்னாள் நடிகை ஜெயபிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘உயிரே உயிரே’ ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயபிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா மோத்வானி, ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கில் கிட்டத்தட்ட 50 ப்டங்களுக்கு இசை அமைத்துள்ள அனூப் ரூபன் இசை அமைத்துள்ள இப்படம் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் படம் பற்றி பேசியதாவது:

‘‘தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற 'இஷ்க்' படத்தின் ரீமேக் தான் இந்த ‘உயிரே உயிரே’. தெலுங்கில் இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு ஜெயபிரதா மேடம் என்னை அழைத்து இந்தப் படத்தை தமிழில் கட்டாயமாக நாம் செய்யவேண்டும் என்றார். நான் அவரிடம் வைத்த ஒரே வேண்டுகோள் கா இந்தப் படத்திற்கு ஹன்சிகா நாயகியாக வேண்டும் என்பதே! கேரளா ஆலப்புழாவில் மாலை நேரத்தில் கிடைக்கக் கூடிய லைட்டிங்கில் 'ஓ பிரயா' என்ற ஒரு பாடல் எடுத்தோம். ஹன்சிகாவின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த பாடலை நான் நினைத்த மாதிரி எடுத்திருக்க முடியாது. அந்த பாடலில் சித்துவும், ஹன்சிகாவும் அருமையாக நடித்துள்ளனர். காதல் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்பது தான் இப் படத்தின் கரு’ என்றார்.

நடிகை ஜெயப்ரதா பேசும்போது, ‘‘இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமையும். எங்களது புரொடக்‌ஷன் கம்பெனியில் பல்வேறு மொழிகளில் படங்கள் தயாரித்துள்ளோம். இந்தப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு எனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறோம். எனக்கு தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பு வேறு எங்கும் கிடைக்காதது. என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் இந்தத் துறைக்கு வந்தால் அது தமிழில் இருந்து தான் தொடங்கவேண்டும் என்பது என் கனவு. இந்தப் படம் மூலமாக அது நிறைவேறியுள்ளது’’ என்றார்.கதாநாயகன் சித்து பேசியதாவது, ‘‘உயிரே உயிரே' எனது முதல்படம். ஹன்சிகா நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார். என்னுடைய அம்மா 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எனவே தனியாக எந்த ஒரு நடிப்புப் பயிற்சிக்கும் செல்லவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை.
என்னுடைய அம்மாவின் பெயருக்கு களங்கம் வராமல் நான் நடந்து கொள்வேன்’’ என்றார். .
கதாநாயகி ஹன்சிகா பேசும்போது, ‘ சித்து மிகத்திறமையானவர், நம்பிக்கையானவர். இந்தப் படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் தனது பணியை அருமையாகச் செய்துள்ளார். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்’’ என்றார்.

இப்படத்தை வருகிற 1-ஆம் தேதி உலகம் முழுக்க ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;