’பில்லா’ ஸ்டைலில் ‘தல 57’?

’பில்லா’ ஸ்டைலில் ‘தல 57’?

செய்திகள் 29-Mar-2016 11:04 AM IST Chandru கருத்துக்கள்

வீரம், வேதாளம் படத்தைத் தொடர்ந்து, அஜித்துடன் இயக்குனர் சிவா மீண்டும் இணைந்திருக்கும் ‘தல 57’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. மே மாத இறுதிக்குள் அனைத்து விஷயங்களையும் இறுதி செய்துவிட்டு ஜூன் முதல் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொருபுறம் இப்படத்திற்கான பாடல்கள், தீம் மியூசிக் உருவாக்கும் வேலைகளில் அனிருத்தும் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘தல 57’ படம் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘பில்லா’ படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படம் என்பதால், அந்த ராசி இந்தப்படத்திற்கும் ஒர்க்அவுட்டாகும் என படக்குழு பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;