‘விசாரணை’க்கு 3 தேசிய விருதுகள்!

‘விசாரணை’க்கு 3 தேசிய விருதுகள்!

கட்டுரை 28-Mar-2016 12:53 PM IST VRC கருத்துக்கள்

இந்திய அளவில் சினிமாவுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய விருதாக கருதப்படுவது மத்திய அரசு வழங்கும் தேசிய விருதுகளை தான்! டெல்லியில் இன்று 63-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரனை’ திரைப்படம் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருதை பெற்றுள்ளது. அத்துடன் இப்படத்தில் நடித்த சமுத்திரகனிக்கு இந்திய அளவில் சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதும், இப்படத்தில் படத் தொகுப்பாளராக பணிபுரிந்த மறைந்த கிஷோருக்கு சிறந்த எடிட்டருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. ‘விசாரணை’க்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இது தவிர இந்திய அளவில் சிறந்த பின்னணி இசைக்கான விருது பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்திற்காக இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.

இந்திய அளவில் சிறந்த நடிகராக அமிதாப்பச்சனும் (படம் - பிக்கு), சிறந்த நடிகையாக கங்கணா ரணவத்துக்கும் (படம் – தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்) கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் கங்கணா ரணவத் தான் (படம் - குயின்) சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் சிறந்த படமாக ‘பாகுபலி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் சிறந்த இயக்குநராக ஹிந்தி படமான ‘பாஜிராவ் மஸ்தானி’யை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி தேர்வாகியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;