‘ராஜாவின் பார்வை ராணியின் பக்க’த்தில் ‘8 பேக்’ ஹீரோ!

‘ராஜாவின் பார்வை ராணியின் பக்க’த்தில் ‘8 பேக்’ ஹீரோ!

செய்திகள் 28-Mar-2016 11:52 AM IST VRC கருத்துக்கள்

‘பிக் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’. இப்படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஆதவா, 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்க உள்ளார். கதாநாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர்களுடன் மதுமிதா, சிங்கப்பூர் தீபன், கானா உலகநாதன் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி அழகுராஜ் இயக்குகிறார். சின்னத்திரையில் பிரபலமான ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியிலிருந்து பெரிய திரைக்கு வந்து அழகுராஜ் இயக்கும் முதல் படம் இது. இது காதல் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் படமாம்! இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, கோவை, கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை சந்தான கிருஷ்ணன் கவனிக்க, லியாண்டர் லீ இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'இருக்கு ஆனா இல்ல' புதிய டிரைலர்


;