‘தெறி’யுடன் மோதத் தயாராகும் ‘இது நம்ம ஆளு’

‘தெறி’யுடன் மோதத் தயாராகும் ‘இது நம்ம ஆளு’

செய்திகள் 28-Mar-2016 10:58 AM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலர் வெளியீட்டைத் தொடர்ந்து, வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது. தற்போது, இதே நாளில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தையும் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பிலிருக்கும் இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. சிற்சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்தது. அதோடு படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா ஆட வேண்டிய கால்ஷீட்டும், வீணடிக்கப்பட்டதால் அப்பாடலை படமாக்காமலேயே இருந்து வந்தனர்.

இந்நிலையில் அப்பாடலில் தெலுங்கு நடிகை ஆதா சர்மவை ஆடவைத்து சமீபத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து படத்தை வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடத்திட்டமிட்டிருக்கிறாராம் சிம்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;