‘மருது’வின் ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து விஷால் அடுத்து மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. மிஷ்கின் தற்போது இயக்கி வரும் ‘சவரக்கத்தி’ பட வேலைகள் முடிந்ததும் ‘துப்பறிவாள’னின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த படம் தவிர விஷால், சுராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்றும், இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ பட ஹீரோயின் மடோனா நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும், இதில் யாரெல்லாம் பணியாற்ற போகிறார்கள், யார் தயாரிப்பு என்பது போன்ற அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...