விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல்?

விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல்?

செய்திகள் 28-Mar-2016 10:34 AM IST Chandru கருத்துக்கள்

‘நானும் ரௌடிதான்’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ ஹீரோ விஜய்சேதுபதியே நடிக்கிறாராம். விஜய்சேதுபதிக்கு திருப்புமுனை வெற்றியை கொடுத்த இயக்குனர் என்பதால், விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்ட்டுக்கு உடனடியாக ‘ஓகே’ சொல்லிவிட்டாராம் விஜய்சேதுபதி. ஏற்கெனவே அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் விஜய்சேதுபதியின் பட்டியலில் தற்போது இந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் இணைந்துள்ளது.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கும் இப்படமும் காதலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பார்கள் எனத் தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;