‘நயனுடன் 9 இயர்ஸுக்கு பிறகு நடித்த படம்! - ஜீவா

‘நயனுடன் 9 இயர்ஸுக்கு பிறகு நடித்த படம்!  - ஜீவா

கட்டுரை 26-Mar-2016 2:00 PM IST VRC கருத்துக்கள்

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தை இயக்கிய ராம்நாத் தனது இரண்டாவது படமாக இயக்கியுள்ள படம் ‘திருநாள்’. ஜீவா, நயன்தாரா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை ‘கோதண்டபாணி ஃபிலிம்ஸ்’ சார்பில் எம்.செந்தில்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீ இசை அமைத்துள்ளார். இந்த ஸ்ரீ வேறு யாருமல்ல, ஸ்ரீகாந்த் தேவா தான். இவர் ஒரு மாறுதலுக்காக இனி ‘ஸ்ரீ’ என்ற பெயரில் தான் இசை அமைக்கப் போகிறாராம்! ஸ்ரீ இசை அமைத்துள்ள ‘திருநாள்’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியானதை தொடர்ந்து நடந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜீவா பேசுகையில்,

“திருநாள் டீம் பாசிட்டிவான ஒரு டீம்! இப்படத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேரும் நல்ல எண்ணம் கொண்டவர்கள். இப்படத்தின் கதையை நான் நீண்டநாட்களுக்கு முன்பே கேட்டேன். இந்த கதையை படமாக தயாரித்திருக்கும் செந்தில்குமார் எங்கள் குடும்ப நண்பர். ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயரித்த ‘சூர்யவம்சம்’, ‘திருப்பாச்சி’ போன்ற பல வெற்றிப் படங்களில் பின்புலமாக இருந்தவர். திருநாளை அவர் தயாரிக்க முன் வந்ததும் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

இப்படத்தில் எனக்கு ‘பிளேடு’ என்ற மாறுப்பட்ட கேரக்டர். படம் முழுக்க நான் வேட்டியில்தான் வருவேன். நீண்ட நாட்களாக ஏன், லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் தரும் விதமாக நான் நடித்திருக்கும் படம் தான் ‘திருநாள்’. இயக்குனர் ராம்நாத் திட்டமிட்டு படம் எடுப்பவர். எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர். முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குனர் சொன்னதை மட்டும்தான் செய்தேன். பிளேடு வாயில் வைத்து நடிக்க ரொம்பவும் சிரமப்பட்டேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாகும்.

இசையமைப்பாளர் ஸ்ரீ அழகான பாடல்களை தந்திருக்கிறார். அவருடன். ‘ஈ’, ‘தெனாவட்டு’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஸ்ரீ குத்துப்பாடு எக்ஸ்பெர்ட் மட்டுமல்ல, அவரால் மெலடி பாடல்களையும் தர முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். அதைப் போல நயன்ஸுடன் (நயன்தாரா) நைன் இயர்ஸுக்கு பிறகு பிறகு இப்படத்தில் இணைந்து நடித்துள்ளேன். இந்த கதைக்கும், கேரக்டருக்கும் அவரை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று பிடிவாதமாக நாங்கள் அவரையே நடிக்க வைத்துள்ளோம். அவரும் நன்றாக நடித்து கொடுத்துள்ளார்’’ என்றார் ஜிவா!

ஜீவாவுக்கு பிறகு பேசிய இயக்குனர் ராம் பிரசாத்,
“அம்பாசமுத்திரம் அம்பானி’ என் முதல் படம். இது என் இரண்டாவது படம். ‘திருநாள்’ படத்தின் முழுக்கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகள் தயாரிப்பாளரை தேடினேன். ஆனால் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. பின்னர் தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டேகால் மணி நேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டேகால் மணி நேரம் கதை கேட்டார். உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக்கதையை கேட்ட பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரௌடிசம் கலந்த கதை. இதற்காக ஜீவாவை கடந்த காலங்களில் அவர் நடித்த படங்களில் செய்யாத நடை, உடை, பாவனை, தலைமுடி என எல்லாவற்றையும் மாற்றி நடிக்க வைத்துள்ளேன். ஜீவா பிளேட் என்ற ரௌடி போன்ற கேரக்டரில் நடிக்கிறார் என்றால் நயன்தாரா பள்ளி ஆசிரியையாக வருகிறார். பிளேடாக வரும் ஜீவாவுக்கும், டீச்சராக வரும் நயன்தாராவுக்கும் இடையில் நடக்கிற சமப்வங்கள் ரசிக்கும்படி இருக்கும். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. விரைவில் ‘திருநாள்’ திரைக்கு வரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;