‘ராஜா மந்திரி’ மூலம் களமிறங்கும் பெண் இயக்குனர்!

‘ராஜா மந்திரி’ மூலம் களமிறங்கும் பெண் இயக்குனர்!

செய்திகள் 26-Mar-2016 12:19 PM IST VRC கருத்துக்கள்

’இறுதிச்சுற்று’ சுதா கொங்காராவை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மற்றுமொரு பெண் இயக்குனர் விரைவில் களமிறங்கவிருக்கிறார்! அவர் பெயர் உஷா கிருஷ்ணனர். இயக்குனர் சுசீந்திரனுடன் ‘பாண்டிநாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணி புரிந்து அனுவபம் பெற்ற உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ராஜா மந்திரி’. இப்படத்தில் கலையரசன், காளி வெங்கட் அண்ணன் தம்பியாக நடிக்க, ஷாலின் ஸோயா, வைஷாலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ராஜா மந்திரி’ படம் குறித்து இயக்குனர் உஷா கிருஷ்ணன் கூறும்போது, ‘‘இந்த படம் மூலம் எந்த கருத்தையும் நான் சொல்ல வரவில்லை. அண்ணன், தம்பிக்கு இடையில் நடக்கிற இயல்பான விஷயங்களை கொண்ட கதை இது! இதில் அண்ணனாக காளி வெங்கட் நடிக்க, தம்பியாக கலையரன் நடிக்கிறார். அண்ணன் தம்பி உறவு குறித்த கதை என்றாலும் இதில் காதல், காமெடி, மனதை தொடும் சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்தும் இருக்கிறது. அனைவரும் பார்க்க கூடிய ஒரு ஜாலியான குடும்ப படமாக இருக்கும். சிதம்பரத்தில் நடப்பது மாதிரியான கதை என்றாலும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை மன்னார்குடி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது. 60 நாட்களில் முழு படத்தையும் எடுத்து முடித்தேன். தமிழ் சினிமாவில் மலையாள படங்களை போன்று யதார்த்தமான திரைப்படங்களை எடுப்பது குறைவு! யதார்த்தமான மலையாள படங்களை போன்று ஒரு படத்தை தர யற்சித்திருக்கிறேன். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. சென்சாரில் ‘யு’ சர்டிஃபிக்கெட்டும் கிடைத்து விட்டது. படத்தை பார்த்து சுசீந்திரன் சார் ‘நீட்’ ஃபிலிம் என்றும் பாராட்டினார். கண்டிப்பாக இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார் இயக்குனர் உஷா!

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘எட்செட்ரா எம்டர்டெயின்மென்ட்’ என்ற பேனரில் வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா, இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ‘ஆரா சினிமாஸ்’ உலகம் முழுக்க அடுத்த மாதம் (ஏப்ரல்) வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தட்றோம் தூக்றோம் டீஸர்


;