சமயலுக்காக கோவா செல்லும் சந்தானம்!

சமயலுக்காக கோவா செல்லும் சந்தானம்!

செய்திகள் 26-Mar-2016 11:31 AM IST VRC கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களை தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ செல்வகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி நடிகை வைபவி ஷண்டிலியா நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற திங்கட் கிழமை கோவாவில் ஆரம்பமாகவிருக்கிறது. இப்படத்தில் சந்தானம் சர்வராக நடிக்கவிருப்பதால் சமயல் கலை சம்பந்தமான விஷயங்களை கவனிப்பதற்காக கிட்டத்தட்ட15 சமயல் கலை நிபுணர்களை நியமித்துள்ளார்களாம். அத்துடன் இப்படத்தை இயக்கும் ஆனந்த் பால்கியும் சமயல் கலையில் நிபுணராம்! ‘இந்த படத்தை இதுவரை யாரும் சொல்லப்படாத ஒரு கதை களத்தில் சொல்லவிருக்கிறேன்’ என்கிறார் இயக்குனர் ஆனந்த் பால்கி! கோவாவை தொடர்ந்து சென்னை தஞ்சாவூர் மற்றும் துபாயில் இப்படத்தின் படப்பிடிப்பை நடைபெறவிருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, பிரமோத் கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். திங்கட் கிழமை துவங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் வரை தொடர்ந்து நடைபெறுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;