3 வேடங்களில் ஜெய் நடிக்கும் படம்!

3 வேடங்களில் ஜெய் நடிக்கும் படம்!

செய்திகள் 26-Mar-2016 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘புகழ்’ படத்தை தொடர்ந்து ஜெய் ‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை சமிபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த படம் தவிர ஜெய் மற்றுமொரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இது அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கும் பேய் படமாகும். இப்படத்தை ‘70 எம்.எம்.’ என்ற நிறுவனம் சார்பில் என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான்’ நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் ஜெய் மாறுபட்ட மூன்று வேடங்களில் நடிக்கிறர். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடந்து வருகிறது. 1989 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடப்பது மாதிரியான கதையை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை சரவணன் கவனிக்க, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இசை அமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வாய்த்த அடிமைகள் - டீசர்


;