கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘இறைவி’, செல்வராகவன் இயக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, ஏ.அர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் எடுக்கப்படவிருப்பதாக கூறப்படும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மகேஷ் பாபுவுடன் மோதும் வில்லன் கேரக்டராம்! இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது என்றும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து...