அதிர்ச்சியில் ஷங்கர்!

அதிர்ச்சியில் ஷங்கர்!

செய்திகள் 24-Mar-2016 10:45 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த படம் பற்றி எந்தத் தகவல்களும், புகைப்படங்களும் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார் ஷங்கர். அதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு யாரும் செல்ஃபோன்களை எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது போன்ற பல கட்டுபாடுகளை விதித்திருந்தார். ஆனால் இந்த கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி நேற்று இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அக்‌ஷய்குமாரின் புகைப்படம் ஒன்று சமூகவலை தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த ஷங்கர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம். டெல்லியில் கிரிக்கெட் மைதானத்தில் கால்பந்து விளையாட்டை ரசிகர்கள் பார்ப்பது மாதிரி படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களாம் அவை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;