நகுல் கதாநாயகனாக நடித்த ‘நாரதன்’ வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அடுத்து நகுல் மலையாள இயக்குனர் கோபாலன் மனோஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் முஞ்சால் நடிக்கிறார். ‘வி.ஆர்.ஃபேமிலி’, ‘ஆராக்ஷன்’, ‘காயல் ஒன்ஸ் எகெய்ன்’ போன்ற ஹிந்தி படங்களில் நடித்தவர் ஆஞ்சல். இந்த படத்திற்கு நிதின் லோபஸ் இசை அமைக்க, சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகங்கள் பலர் பங்கேற்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (26-3-16) துவங்கவிருக்கிறது. இப்படத்தில் நகுல், ஆஞ்சலாவுடன் தமிழின் முன்னணி நடிகர், நடிகையர் சிலர் நடிக்க இருக்கிறார்கள்.
நடிகை தேவயானி, நடிகர் நகுல் ஆகியோரின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்....
நகுல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘செய்’. இந்த படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்று துவங்கும் பாடலை...
நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’. விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்தின் சென்னை விநியோக...