‘இஞ்சி இடுப்பழகி’, ‘பெங்களூர் நாட்கள்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பிவிபி சினிமாஸ்’ தயாரித்துள்ள பிரம்மாண்ட படம் ‘தோழா’. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் (25-3-2016) உலகம் முழுக்க பெரிய அளவில் ரிலீசாகவிருக்கிறது. கார்த்தி, நாகார்ஜுனாவுடன் தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், விவேக், சமீபத்தில் காலமான நடிகை கல்பனா, ஜெயசுதா உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். தெலுங்கு பட இயக்குனரான வம்சி இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘ஊபிரி’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.
ஃபிரெஞ்சு மொழிப் படமான The Intouchables படத்தின் ரீ-மேக்கான ‘தோழா’ மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ‘பையா’, ‘சிறுத்தை’ படங்களை தொடர்ந்து தமன்னா இப்படத்தில் மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கார்த்தி நடித்த சில தமிழ் படங்கள் ஆந்திராவிலும் வெளியாகி வெற்றி பெற்றிருப்பதாலும், நாகார்ஜுனாவுடன் கார்த்தி இணைந்து நடித்திருப்பதாலும் இப்படத்திற்கு அங்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கியிருக்கும் வம்சி தெலுங்கில் ஏற்கெனவே மூன்று படங்களை இயக்கியுள்ளார். அதில் இரண்டு படங்கள் ஹிட் என்று கூறப்படுகிறது. அதனால் ’தோழா’ மீது இரு மாநில ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்து வருபவரும், ‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு இசை அமைத்தவருமான கோபி சுந்தர் இசை அமைத்திருக்கும் ‘தோழா’வின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அத்துடன் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. பல வெளிநாடுகளில் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். அதை போலவே இப்படத்தின் சண்டை காட்சிகளையும் பல வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்க மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. தோழாவின் வசனங்களை ‘கூக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குனரான ராஜு முருகன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பி.எஸ்.வினோத் கவனித்துள்ளார்.
இப்படி பல முன்னணி கலைஞர்கள் கை கோர்த்துள்ள ‘தோழா’ பெரும் வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் கார்த்தி, நாகார்ஜுனாவின் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...