ராஜு முருகன் இயக்கிய படம் ‘குக்கூ’. விமர்சன ரீதியாக நிறைய பாராட்டுக்களை குவித்த இப்படத்தை தொடர்ந்து பெயரிடப்படாமல் ஒரு படத்தை இயக்கி வந்தார் ராஜு முருகன். படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுவரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை இன்று வெளியிடுவதாக நேற்று அறிவித்திருந்தார்கள். அதன் படி இப்படத்திற்கு ‘ஜோக்கர்’ என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். ‘குக்கூ’வில் பார்வையற்றோரின் உலகத்தை சொன்ன ராஜு முருகன், ‘ஜோக்கரி’ல் வேறு ஒரு கதைகளத்தை கையாண்டுள்ளாராம்! இப்படத்தின் ஒளிப்பதிவை ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன் கவனித்துள்ளார். ராஜு முருகன் இயக்கிய ‘குக்கூ’ படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஷண்முகம் வேலுசாமி தான் ‘ஜோக்கரு’க்கும் படத்தொகுப்பாளர். ‘முண்டாசுப்பட்டி’ படப் புகழ் ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஏற்கெனவே கார்த்தி நடிப்பில் ‘சகுனி’ படத்தை தயாரித்த ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தான் தற்போது கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா முதலானோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘காஷ்மோரா’ படத்தையும் தயாரிக்கிறது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து சென்ற...
தமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...