புதுமுகங்கள் நடிக்கும் ‘நீ என்ன மாயம் செய்தாய்’

புதுமுகங்கள் நடிக்கும்   ‘நீ என்ன மாயம் செய்தாய்’

செய்திகள் 23-Mar-2016 12:35 PM IST VRC கருத்துக்கள்

நரேன் வழங்கும் என்.பிக்சர்ஸ் செல்பி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா நரேன் தயாரிக்கும் படம் ‘நீ என்ன மாயம் செய்தாய்’. இப்படத்தில் விவேக் சேகர் கதாநாயகனாக நடிக்கிறார். நேஹா சக்சேனா நாயகியாக நடிக்கிறார். இவர் அர்ஜுனுடன் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக அர்ஷிதா சாய் நடிக்கிறார். மற்றும் மதுரை ஷர்மிளா, மோனிகா, ஷீபா, மாஸ்டர் தமிழ் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை எஸ்.ஆர்.பாலாஜி இயக்குகிறார். இவர் எடிட்டிங் துறையில் நிறைய படங்களில் பணியாற்றியவர். அத்துடன் ‘இன்னுமா நம்மள நம்பறாங்க’ என்ற படத்தை இயக்கியவர்.

‘நீ என்ன மாயம் செய்தாய்’ படம் குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜி கூறும்போது, ‘‘வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் சித்தார்த் (விவேக் சேகர்) தனது சிறு வயது தோழியை காண ஆவலோடு அவளைத் தேடி செல்கிறான். அங்கே அவனது சிறுவயது தோழி மேகா (நேஹா சக்சேனா) எல்லாவற்றையும் இழந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவளுக்கு ஆறுதல் சொல்லி, வேண்டிய உதவிகளை செய்கிறான். அந்த நட்பு காதலாக மாறுகிறது. அவர்கள் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதை இளமை ததும்ப உருவாக்கி உள்ளோம். இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களின் ரசனைக்கேற்ப படம் உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை ரதன் சந்தாவத் கவனிக்க, டேவிட் பரத்குமார் இசை அமைத்துள்ளார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி - டிரைலர்


;