‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ரிலீஸ் எப்போது?

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 23-Mar-2016 10:58 AM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியுள்ளது. இன்னும் நான்கு பாடல் காட்சிகளை படமாக்கி விட்டால் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து விடுமாம். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை உலம் முழுவதும் வேந்தர் மூவீஸ் வெளியிடவிருக்கிறது. இப்படத்தில் ராகவா லாரஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, முக்கிய கேரக்டரில் சத்யராஜ நடிக்கிறார். இவர்களுடன் அஸ்வத் தோஸ் ராணா, கோவை சரளா, மதன் பாப், தம்பி ராமையா, சதீஷ், ‘கும்கி’ அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி என பலர் நடிக்கிறார்கள். ‘காஞ்சனா-2’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். இது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 87-ஆவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;