‘காஷ்மோரா’ பட நிறுவனத்துடன் இணைந்த ‘குக்கூ’ ராஜு முருகன்!

‘காஷ்மோரா’ பட நிறுவனத்துடன் இணைந்த ‘குக்கூ’ ராஜு முருகன்!

செய்திகள் 22-Mar-2016 12:19 PM IST Chandru கருத்துக்கள்

பிரபல வாரஇதழில் எழுத்தாளராகப் பணிபுரிந்த ராஜு முருகன் ‘குக்கூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார். பார்வையற்றோரின் உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டிய இப்படம் விமர்சனரீதியாக பெரிய பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தின் வசனங்கள் ‘அப்ளாஸ்’ அள்ளின. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்காக பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் இப்படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ‘முண்டாசுப்பட்டி’ புகழ் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடித்திருப்பவர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டோர் விவரங்களும் படத்தலைப்பு அறிவிப்புடன் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சகுனி’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தை தற்போது பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;