ஒரே நாளில் உதயநிதி, பாபி சிம்ஹா படங்கள்!

ஒரே நாளில் உதயநிதி, பாபி சிம்ஹா படங்கள்!

செய்திகள் 22-Mar-2016 12:16 PM IST VRC கருத்துக்கள்

பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலசரவணன் முதலானோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரத் இயக்கியிருக்கும் பொலிடிக்கல் த்ரில்லர் படம் ’கோ-2’. ‘RS Infotainment’ நிறுவனம் சார்பில் எர்லெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வர, இப்படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதே நாளில் தான் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வரும் ‘மனிதன்’ திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அஹமத் இயக்கி வரும் ‘மனிதன்’ படத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை தொடர்ந்து மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹன்சிகா. வழக்கமாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பார். ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை சந்தோஷ் நாராயணனிடம் வழங்கியுள்ளார்கள். உதயநிதியும் சந்தோஷ் நாராயணனும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 29ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்த இரண்டு படங்களிலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களை ஏற்று நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க தகவலாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;