கபாலி, 24ஐ தொடர்ந்து ‘தெறி’!

கபாலி, 24ஐ தொடர்ந்து ‘தெறி’!

செய்திகள் 22-Mar-2016 10:47 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ டீஸர் வெளியாகி 92 லட்சம் பார்வையிடல்களை யு டியூப்பில் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ‘தெறி’ டிரைலர் வெளியாகியுள்ளது. டீஸரைப் போலவே டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் வெளியாகி 40 மணி நேரத்திற்குள்ளாகவே 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களைப் பெற்றிருக்கிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட ‘தெறி’ பாடல்களும் விஜய் ரசிர்களை பெரிய அளவில் வசீகரித்துள்ளது.

‘தெறி’யின் எதிர்பார்ப்பு நாளுக்க நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை சுமார் 3 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம் சினி கேலக்ஸி நிறுவனம். இந்நிறுவனம் ஏற்கெனவே ரஜினியின் கபாலி, சூர்யாவின் 24 ஆகியவற்றின் யு.எஸ். ரைட்ஸையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘தெறி’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;