சென்னையில் விக்ரம், நயன்தாரா டூயட்!

சென்னையில் விக்ரம், நயன்தாரா டூயட்!

செய்திகள் 22-Mar-2016 10:23 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே சென்னை மற்றும் மலேசியாவில் நடத்தப்பட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இப்போது மீண்டும் சென்னையில் ‘இருமுகனு’க்கான பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இந்த படப்பிடிப்பில் விக்ரம், நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள். ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இப்படத்தில் விக்ரம் இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க, நயன்தாரா, நித்யா மேனன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஷிபு தமீன் தயாரிப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது ‘இரு முகன்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;