ஐஸ்வர்யாவை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்ற காக்கா முட்டை!

ஐஸ்வர்யாவை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்ற காக்கா முட்டை!

செய்திகள் 22-Mar-2016 10:10 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்சினிமாவில் தனி முத்திரை பதித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் அதில் பங்காற்றியவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் அப்படத்தில் கதையின் நாயர்களான இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் பாலிவுட் படமொன்றில் நாயகியாக நடிக்கிறார். சேரிப்பெண் கேரக்கடரில் அசத்தலாக நடித்திருந்த ஐஸ்வர்யாவின் பங்களிப்பைப் பார்த்த பாலிவுட் இயக்குனர் அஷிம் அலுவாலியா, தான் இயக்கவிருக்கும் ‘டாடி’ படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாவை அழைத்துள்ளார்.

‘டாடி’ படத்தில் அர்ஜுன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா. இப்படத்திலும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ள கேரக்டர் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கெனவே 2 நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா மீண்டும் அடுத்த வாரம் படப்பிடிப்பிற்காக மும்மை பறக்கவிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;