சசிகுமாரை இயக்கும் வசந்தபாலனின் உதவி இயக்குனர்!

சசிகுமாரை இயக்கும் வசந்தபாலனின் உதவி இயக்குனர்!

செய்திகள் 22-Mar-2016 10:07 AM IST Chandru கருத்துக்கள்

‘தாரை தப்பட்டை’ படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை ஒதுக்கிய சசிகுமார், தற்போது அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடிக்க உள்ளார். சசிகுமார் நடிப்பில் விரைவில் ‘வெற்றிவேல்’ எனும் படம் வெளிவரவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வசந்தபாலனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பிரசாத் என்பவர் இயக்கவிருக்கும் அறிமுகப் படமொன்றில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம் சசிகுமார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதைக்களம் சிட்டியிலும், வில்லேஜிலும் நகர்வதுபோல் உருவாக்கியிருக்கிறார்களாம்.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் இம்மாத இறுதியில் துவங்கவிருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து கோவில்பட்டிக்கு சென்று அங்கே படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம். சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகைக்கான தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;