கே.வி.ஆனந்த் + விஜய்சேதுபதி + டி.ஆர் : சர்ப்ரைஸ் கூட்டணி!

கே.வி.ஆனந்த் + விஜய்சேதுபதி + டி.ஆர் : சர்ப்ரைஸ் கூட்டணி!

செய்திகள் 21-Mar-2016 6:05 PM IST Chandru கருத்துக்கள்

இப்படி ஒரு கூட்டணியில் படம் உருவாகும் என ரசிகர்கள் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். ஆம்... கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து டி.ராஜேந்தர் நடிக்கும் படத்தின் அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் நியூஸ். ‘அனேகன்’ படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் இந்த பெயரிடப்படாத படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இரட்டை கதாசிரியர்கள் சுபா இப்படத்திலும் திரைக்கதை, வசனம் போன்ற பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

சீனு ராமசாமி இயக்கத்தில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த ‘தர்மதுரை’ படத்திலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;