இளையராஜாவின் 1001வது படம்!

இளையராஜாவின் 1001வது படம்!

செய்திகள் 21-Mar-2016 3:43 PM IST VRC கருத்துக்கள்

அக்‌ஷயா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒரு மெல்லிய கோடு’. இந்த படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக அக்ஷா பட், நேஹா சக்சேனா நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் மனிஷா கொய்ராலா, ரவிகாளே ஆகியோரும் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘வனயுத்தம்’ முதலான படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியிருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ படம் குறித்து இயக்குனர் ரமேஷ் கூறும்போது,

‘‘நான் இயக்கிய அனைத்து படங்களுமே நிஜ சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை. இந்த படத்தின் கதை நிஜ சம்பவமா இல்லையா என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது அறிவீர்கள். இப்படத்தின் ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம். இசைஞானி இளையராஜா இசை அமைக்கும் 1001வது படம் இது. அவரது பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;