நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானங்கள்!

நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானங்கள்!

செய்திகள் 21-Mar-2016 2:58 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை (20.03.2016) சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது. தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள், சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காலமான கலைஞர்கள் மனோரமா, குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கான இணையதளத்தை எஸ்.எஸ்.ஆரின் பேரன் பங்கஜ் வடிவமைத்து இலவசமாக வழங்கினார். நடிகர் சங்க கட்டிட மாதிரி அனிமேஷன் படம் திரையிடப்படது. இந்த கட்டிடத்தில் என்னென்ன இருக்கும் என்பது குறித்து விஷால் விளக்கினார்.

விஷால் பேசும் போது,
'1. பெரிய ஆடிட்டோரியம். இது 1000 பேர் அமரும் வசதி கொண்டது.
2. சிறிய திருமண மண்டபம். இது 300 பேர் அமரும் வசதி கொண்டது.
3. பெரிய திருமண மண்டபம் .இது 900 பேர் அமரும் வசதி கொண்டது.
4. சாப்பிடுமிடம் 400பேர் அமரும் வசதி கொண்டது.
5. பிரிவியூ திரையரங்கம் 150பேர் அமரும் வசதி கொண்டது.
6. நடிகர் சங்க அலுவலகம்.
7.நடிகர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம். இது 2 00 பேர் கொண்டது.

அடுத்து கார் பார்க்கிங். இது 165 கார்களுக்கான கார் நிறுத்தமிடம்.

இவ்வளவும் கொண்ட கட்டிட்த்திற்கு ஆகும் செலவு 26 கோடி ரூபாய். நடிகர் சங்கத்திற்கு இப்போது 2 கோடி ரூபாய் கடன் உள்ளது .இந்தக் கட்டுமானத் தொகையைப் பெற நட்சத்திரக் கிரிக்கெட், நான் (விஷால்’ கார்த்தி இணைத்து நடிக்கும் படம் எடுப்பது போன்ற பல திட்டங்கள் உள்ளன.

சிறிய திருமண மண்டபத்திற்கான மொத்த செலவை ஐசரி கணேஷ் அவர்களும், பிரிவியூ திரையரங்கத்திற்கான மொத்த செலவை .சிவகுமார், சூர்யா, கார்த்தி குடுபத்தினர் ஏற்று கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். இவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் 56 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 6 கோடியே 74 லட்சம் வருமானம் பெறும் திட்டம் உள்ளது. இதற்காக ஏப்ரல் 17ல் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தவிருக்கிறோம். சூப்பர் ஸ்டார் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நாடகம் நடத்தும் திட்டமும் உள்ளது’’ என்று சொன்ன விஷால் இன்றுதான் தான் செயலாளராக பதவி ஏற்பதாக உணர்வதாக கூறினார்.

விழாவின் இடையில் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து 'ஸ்கைப்' மூலம் பேசி அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறினார். நடிகர் சங்கத்தின் கட்டிட மாதிரியை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர் தாஸ் அகியோர் திறந்து வைத்தனர்.

சங்க பொருளாளர் கார்த்தி பேசும்போது "இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை. இதை என் பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்கள் எதற்கும் யாரிடமும் கையேந்த விடமாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத் திட்டங்கள் பலன் தரும். முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி புகார் செய்ய இருக்கிறோம்’’ ‘என்றார்.

சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘‘இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நம்பிக்கையை விட அன்பு காட்டியது அதிகம். அதற்கும் நன்றி. அவச்சொல், அவதூறு, வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படிக் கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை நம்புங்கள் அனைவரும் இணைவோம். நல்லதே நடக்கும்'' என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;