தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ.காலமானார்!

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ.காலமானார்!

செய்திகள் 21-Mar-2016 12:23 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முதல் பத்திரிகை தொடர்பாளர் ( மக்கள் தொடர்பாளர் ) என்ற பெருமைக்குரியவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலியில் அவர் திடீரென்று இன்று காலை காலமாகியுள்ளார். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் புகைப்பட கலைஞராக தன் கலை வாழ்க்கையை துவங்கினார். இந்நிலையில் ஆனந்தனின் நண்பர் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த ஃபிலிம் நியூஸ் பத்திரிகையில் புகைப்பட கலைஞராக பணியாற்றினார்.இதனை தொடர்ந்து பத்திரிகையின் பெயருடன் ஃபிலிஸ் நியூஸ் ஆனந்தன் என்று அழைக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து இவர் பத்திரிகைகளுக்கு சினிமா குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் வழங்கும் பணிகளை செய்து வந்தார். இவர் மூலம் உருவாகியது தான் சினிமா மக்கள் தொடர்பாளர் என்ற பதவி! ஒரு திரைப்படத்தின் பூஜை நடைபெறுவதிலிருந்து அப்படம் வெளியாகும் வரையிலான அந்த படம் குறித்த செய்திகளையும், தகவல்களையும், புகைப்படங்களையும் பத்திரிகைகளுக்கு உரிய முறையில் கொண்டு சேர்ப்பது தான் மக்கள் தொடர்பாளர் என்பவரின் பணி! இந்த பணியை பல ஆண்டுகளாக செவ்வனே செய்து வந்த ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும்! தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்பட்டு வந்த ஃபிலிம்ஸ் நீயூஸ் ஆனந்தன் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;