‘டெம்பர்’ ரீமேக்கில் நடிக்கப்போவது விஷாலா? சிம்புவா?

‘டெம்பர்’ ரீமேக்கில் நடிக்கப்போவது விஷாலா? சிம்புவா?

செய்திகள் 19-Mar-2016 11:28 AM IST Chandru கருத்துக்கள்

‘மருது’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு நடிகர் சங்க வேலைகளில் பிஸியாக இருக்கிறார் விஷால். இந்நிலையில், ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார் என்றும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் எனவும் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்திற்கான பூஜை நேற்று நடந்தது. இப்படமும் ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. ஒரே படத்தை எப்படி இரண்டு பேர் ரீமேக் செய்ய முடியும்? என குழம்பிப்போய் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே,

‘‘டெம்பர் படத்தின் ரீமேக்கில் விஷால் நடிக்கவிருப்பதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம். அது உண்மையில்லை’’ என அதிகாரபூர்வமாக பி.ஆர்.ஓ ஒருவர் பத்திரிகை செய்தி அனுப்பி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மைக்கேல் ராயப்பன் வட்டாரங்களில் இதுகுறித்த விசாரித்தபோது, ‘‘சிம்பு படம் ரீமேக் என்பது உண்மைதான். அதற்காக 3 தெலுங்குப் படங்களை பரிசீலனையில் வைத்திருக்கிறோம். அதில் ‘டெம்பர்’ படமும் ஒன்று. மற்றபடி எந்தப்படம் என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லை’’ என்று தகவல் கிடைத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;