அல்லு அர்ஜுன், லிங்குசாமியுடன் கைகோர்க்கும் அனிருத்!

அல்லு அர்ஜுன், லிங்குசாமியுடன் கைகோர்க்கும் அனிருத்!

செய்திகள் 19-Mar-2016 11:14 AM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு விஷாலை வைத்து ‘சண்டக்கோழி 2’ படத்தை லிங்குசாமி இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், சிற்சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை நாயகனாக்கி தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படமொன்றை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி. இப்படத்திற்காக புதிய நாயகி ஒருவரை தேடி வருகிறாராம் லிங்கு. ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ள ஸ்கிரிப்ட் என்பதால், ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் மீரா ஜாஸ்மினை அறிமுகப்படுத்தியது போல, புதிய நாயகி ஒருவரை தமிழுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ஏப்ரல் முதல் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;