‘தெறி’ ஆல்பத்தில் என்னென்ன ஸ்பெஷல்?

‘தெறி’ ஆல்பத்தில் என்னென்ன ஸ்பெஷல்?

கட்டுரை 18-Mar-2016 11:01 AM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கும் 2வது படம், விஜய் நடிக்கும் 59வது படம், ஜி.வி. இசையமைக்கும் 50வது படம் என பல ஸ்பெஷல்களோடு உருவாகிக் கொண்டிருக்கிறது ‘தெறி’. வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) மாலை 6 மணியளவில் சத்யம் திரையரங்கில் ‘தெறி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அனேகமாக இந்த விழாவில் ‘கபாலி’ நாயகன் ரஜினிகாந்த் தலைமையேற்க வாய்ப்பிருக்கிறது. காரணம், ‘தெறி’, ‘கபாலி’ இரண்டு படங்களின் தயாரிப்பாளரும் ஒருவரே. அவர் கலைப்புலி எஸ்.தாணு.

இந்நிலையில், ‘தெறி’ படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றின் பட்டியல் இங்கே...

1. ஜித்து ஜில்லடி...

பாடியவர்கள் : ‘தேனிசைத் தென்றல்’ தேவா, பாலசந்திரன்
பாடலாசிரியர் : ரோகேஷ்

2. என் ஜீவன்...

பாடியவர்கள் : ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலக்ஷ்மி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார், ஆர்.தியாகராஜன் (சமஸ்கிருதம்)

3. ஈனா மீனா டீகா...

பாடியவர்கள் : உத்ரா உன்னிகிருஷ்ணன், ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : பா.விஜய், அருண்ராஜா காமராஜ் (ராப்)

4. செல்லாக்குட்டி...

பாடியவர்கள் : விஜய், நீத்தி மோகன்
பாடலாசிரியர் : கபிலன்

5. தாய்மை...

பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர் : புலவர் புலமைபித்தன்

6. ராங்கு...

பாடியவர்கள் : டி.ராஜேந்தர், ஜி.வி.பிரகாஷ் குமார், சோனு கக்கர்
பாடலாசிரியர் : கபிலன்

7. டப் தெறி ஸ்டெப்..

பாடியவர்கள் : அருண்ராஜா காமராஜ்
பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;