50-வது நாளில் இறுதிச்சுற்று!

50-வது நாளில் இறுதிச்சுற்று!

செய்திகள் 18-Mar-2016 10:53 AM IST VRC கருத்துக்கள்

இந்த ஆண்டு பிறந்து ஜனவரி 1ஆம் தேதி முதல் இதுவரையில் கிட்டத்தட்ட 50 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. அனால இந்த 50 திரைப்படங்களில் எத்தனை வெற்றிப் படங்களாக அமைந்து தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித்தந்தன என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலே இருக்கின்றன. இந்த வருடம் வெளியாகிய திரைப்படங்களில் விமர்சன ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் பேசப்பட்ட படம் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’. மாதவன், ரித்திகா சிங் ஜோடியாக நடித்த இப்படம் வெளியாகி இன்று வெற்றிகரமாக 50-ஆவது நாளை எட்டியுள்ளது. பொதுவாக பெண் இயக்குனர்கள் இயக்கும் படங்களுக்கு கமர்ஷியல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் இந்த கருத்தை சமீபகாலத்தில் வந்த சில படங்கள் முறியடித்துள்ளன! இதற்கு உதாரணமாக மலையாளத்தில் அஞ்சலி மேன்ன இயக்கிய ‘பெங்களூட டேஸ்’ மற்றும் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ ஆகிய படங்களை சொல்லலாம். பெண் இயக்குனர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘இறுதிச்சுற்று’ போன்ற தரமான திரைப்படங்கள் இன்னும் வரட்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;