10 வருடம், 50 படங்கள் : ஜி.வி.யின் ‘தெறி’ பயணம்!

10 வருடம், 50 படங்கள் : ஜி.வி.யின் ‘தெறி’ பயணம்!

செய்திகள் 18-Mar-2016 10:40 AM IST Chandru கருத்துக்கள்

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படம் மூலம் 2006ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ். தனது வித்தியாசமான இசையமைப்பின் மூலம் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்ற ஜி.வி. வருடத்திற்கு ஐந்தாறு படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபுறம் இசையமைத்துக் கொண்டே, இன்னொருபுறம் தன்னை ஒரு நாயகனாகவும் வளர்த்துக்கொள்ள ஆசைப்பட்ட ஜி.வி, 2014ஆம் வருடம் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். முதல் படமே ஹிட்டடிக்க, தனது 2வது படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் இளைஞர்களின் ஃபேவரைட் நடிகராகவும் மாறினார்.

வளர்ந்து வரும் நடிகர்களில் இப்போது ஜி.வி.யும் ஒருவர். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமின்றி மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதையும் கவனித்து வரும் ஜி.வி., அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்திற்கும் இசையமைக்கிறார். இது அவரின் 50வது படம் என்பது இன்னுமொரு சிறப்பு. அதோடு 2006ல் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி, தற்போது தமிழ்சினிமாவில் தனது 10வது வருடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

வாழ்த்துக்கள் ஜி.வி.பிரகாஷ் குமார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;