ஜூனில் ஷூட்டிங், பொங்கலுக்கு ரிலீஸ் : ‘தல 57’ பிளான்!

ஜூனில் ஷூட்டிங், பொங்கலுக்கு ரிலீஸ் : ‘தல 57’ பிளான்!

செய்திகள் 18-Mar-2016 10:20 AM IST Chandru கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்திற்குப் பிறகு, ஆபரேஷன் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார் ‘தல’ அஜித். தனது 56வது படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்திலேயே 57வது படத்திலும் நடிக்கவிருக்கிறார் என எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. படத்தை தயாரிக்கவிருப்பது சத்யஜோதி ஃபிலிம்ஸ் என்பதும் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான்.

ஓய்வு முடிந்து மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிவரும் அஜித், ஜூன் மாதத்தில் ‘தல 57’ படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘வேதாளம்’ படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம். அனேகமாக தமன்னா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

6 மாதத்தில் மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு 2017 பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;