தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதிலிருந்து உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அத்துடன் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டவும் தீர்மானித்துள்ளார்கள். இதற்கு நிதி திரட்டும் வகையில் சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளார்கள். அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளவிருப்பதால் பொலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரை நடிகர் சங்க தலைவர் நாசர் சந்தித்து பேசியுள்ளார். இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேறகின்றனர். ஆறு ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் 6 பேர் மட்டுமே அணியில் இருப்பார்கள். நான்கு கால் இறுதி போட்டிகளும், இரண்டு அரையிறுதி போட்டிகளும் நடக்கும். பின்னர் இறுதிப் போட்டி நடக்கும். காலை துவங்கும் போட்டி இரவு வரை நடக்கும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...