டெல்லியில் எந்திரன் டீம்!

டெல்லியில் எந்திரன் டீம்!

செய்திகள் 16-Mar-2016 11:19 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘எந்திரனி’ன் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்ததை தொடர்ந்து முன்றாம்கட்ட படப்பிடிப்பிற்காக ‘2.0’ படக்குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். நாளை முதல் புது தில்லியில் ‘2.0’வின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் முதலானோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்ப்டுகிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த ‘கபாலி’யின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில் ‘2.0’வில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினி! ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;