‘ஜெயம்’ ரவியின் ‘போகன்’ – அதிகாரபூர்வ தகவல்கள்!

‘ஜெயம்’ ரவியின் ‘போகன்’ – அதிகாரபூர்வ தகவல்கள்!

செய்திகள் 16-Mar-2016 10:20 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி நடிப்பில், பிரபுதேவாவின் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘போகன்’. சென்ற வருடம் வெளியாகி வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லஷ்மன் இயக்கும் இப்படத்திலும் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடி ஹன்சிகா தான். ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் என ரோமியோ ஜூலியட் படத்தில் இணைந்தோர் ‘போகன்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.
‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம்ரவியுடன் மோதிய அரவிந்த்ஸ்வாமியும் இப்படத்தில் நடிக்கவிருப்பது கூடுதல் பலம் சேர்க்கிறது போகனுக்கு.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆ ம் தேதி பெரம்பூர் பின்னிமில்லில் துவங்குகிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் சூப்பர் ஹிட் பாடல் டண்டணக்கா.. அதைப் போன்று ‘ போகன்’ படத்திற்காக உருவாக்கப்பட்டுல்ள “டமால் டுமீல்..’ என்ற பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;