அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்காக சென்னையிலுள்ள பல இடங்களை பரிசீலனை செய்த படக்குழுவினர், இறுதியாக சத்யம் திரையரங்கில் ‘தெறி’ படப் பாடல்களின் வெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்துள்ளார்கள். இதனை இன்று படத்தின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவ்விழாவில் ரஜினிகாந்த் உட்பட பல பிரபல முன்னணி நடிகர்கள், மற்றும் கலைஞர்கள் பங்குபெறவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘தெறி’க்கு ஜி,.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இது ஜி.வி.இசை அமைக்கும் 50 ஆவது படமாகும். ‘தெறி’யின் டீஸர், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ள நிலையில் ஜி.வி.யின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்! ‘தெறி’, தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...