3 கதாநாயகிகளுடன் களமிறங்கும் சசிகுமார்!

3 கதாநாயகிகளுடன் களமிறங்கும் சசிகுமார்!

செய்திகள் 15-Mar-2016 4:39 PM IST VRC கருத்துக்கள்

பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களை தனது ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் மூலம் வினியோகம் செய்த ஆர்.ரவீந்திரன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ‘வெற்றிவேல்’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, ‘ஜில்லா’ படத்தில் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மியா ஜார்ஜ், நிகிலா, வர்ஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகளில் இருந்து வரும் ‘வெற்றிவேல்’ படத்தின் பாடல்களை வருகிற 18-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - டீசர்


;