தனுஷுடன் இணைகிறாரா ராணா?

தனுஷுடன் இணைகிறாரா ராணா?

செய்திகள் 15-Mar-2016 4:19 PM IST VRC கருத்துக்கள்

தனுஷை வைத்து கௌதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில் இந்த படம் குறித்த பல புதிய தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷை தேர்வு செய்துள்ள கௌதம் மேனன், இப்படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டருக்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாரன ராணாவையும் தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வின் இரண்டாவது நாள் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. அந்த படப்பிடிப்பு தளத்தில் ராணாவும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை வைத்து இப்படத்தில் ராணாவும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;