ராஜா, மந்திரியாக கலையரன், காளி வெங்கட்!

ராஜா, மந்திரியாக கலையரன், காளி வெங்கட்!

செய்திகள் 15-Mar-2016 1:01 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளர் உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ராஜா மந்திரி’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ‘மெட்ராஸ்’ பட புகழ் கலையரசனும், காளி வெங்கட்டும் நடித்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் பாலசரவணன், ‘நாடோடிகள்’ கோபால், சரவண சக்தி, ‘கயல்’ பெரோரா, வைஷாலி முதலானோரும் நடித்துள்ளார். ‘இப்படம் ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் காதல், நட்பு, அழகான நினைவுகள் ஆகியவற்றின் தொகுப்பு’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் உஷா கிருஷ்ணன். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை Etcetera Entertainment சார்பில் மதியழகன், ரம்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள இப்படத்தை ‘ஆரா சினிமாஸ்’ தமிழகம் முழுக்க வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தட்றோம் தூக்றோம் டீஸர்


;