தனுஷுக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்!

தனுஷுக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்!

செய்திகள் 15-Mar-2016 10:49 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. நேற்று துனுஷ் சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்கிய கௌதம் மேனன் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, ‘ஒரு பக்க கதை’ பட ஹீரோயின் மேகா ஆகாஷை நடிக்க வைக்க தேர்வு செய்திருக்கிறார். பாலாஜி தரணீதரன் இயக்கி வரும் ‘ஒரு பக்க கதை’யில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடி மேகா ஆகாஷ் தான். இந்த படம் தவிர சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால் நடிக்கும் படத்திலும் ஒரு ஹீரோயின் மேகா ஆகாஷ் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;