’என்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சவாரி’. ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் இடம் பெற்றதைப் போல இப்படத்திலும் ஒரு கார் முக்கிய இடம் வகிக்கிறது. இப்படத்தில் புதுமுகங்கள் கார்த்திக் யோகி, பெனிட்டோ ஃப்ராங்கிளின், மதிவாணன் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, சனம் ஷெட்டி கதையின் நாயகியாக நடித்துள்ளார். விஷால் சந்திர சேகர் இசை அமைத்துள்ளார். ‘நாளைய இயக்குனர்’ புகழ் குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள ‘சவாரி’ குறித்து அவர் கூறும்போது,
‘‘இது ரோடு டிராவல் திகில் கதை. அதனை காமெடி கலந்து தருகிறோம். சென்னையிலிருந்து காரில் மூன்று பேர் ஆந்திரா நோக்கி பயணமாகிறார்கள். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி. ஒருவர் சைக்கோ! இன்னொருவர் டிரைவர். இம்மூவரின் பயணம் ஒன்றாக இருந்தாலும் அவர்களது நோக்கம் வெவ்வேறானவை! ஆனால் மூவரது நோக்கமும் ஒரு புள்ளியில் இணைகிறது. அந்த புள்ளி யார் என்றால் ஹீரோயின்! இப்படி வித்தியாசமான ஒரு திரைக்கதையுடன் ஒரு சைக்கோ த்ரில்லர் படமாக இதனை இயக்கியிருக்கிறேன். இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். 40 நாட்களில் படத்தை முடித்துள்ளோம். படத்தின் 80 சதவிகித கதையும் ஒரு கார் பயணத்திலே இருக்கும். அதற்காக வித்தியாசமான ஒரு காரை தயார் செய்து படமக்கியுள்ளோம்.
‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ அதிபர் முரளி அவர்கள் இப்படத்தை பார்த்து, ‘படம் நன்றாக இருக்கிறது, இதனை நாங்களே வெளியிடுகிறோம்’ என்று சொன்னதே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்! வருகிற 18-ஆம் தமிழகமெங்கும் ‘சவாரி’ வெளியாகவிருக்கிறது’’ என்று சொன்ன இயக்குனர் குகன் சென்னியப்பன், ‘‘இப்படம் நாங்கள் நினைத்தது மாதிரி எடுக்க எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் செழியன் தான்’’ என்றார்.
‘தாயின் அருள் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் அனிதா தயாரித்திருக்கும் படம்...
‘அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயரித்த ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கோட்டபடி ராஜேஷ் தயாரித்து வரும்...
அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயரித்த ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கோட்டபடி ராஜேஷ் அடுத்து...