‘நேரம்’, ‘தெகிடி’, ‘வடகறி’ உட்பட பல திரைப்படங்களிலும், ‘இளவரசி’, ‘செல்வி’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தவர் சாய்பிரசாந்த். இவருக்கு வயது 30. சென்ற வருடம் தான் இவருக்கு திருமணம் நடந்தது. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர் குடும்ப தகராறு காரணமாக நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினரான இவர் நேற்று காலை சாலிகிராமத்தில் நடந்த சின்னத்திரை சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பிரசாந்த் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். சாய் பிரசாந்தின் தற்கொலை சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைப்படங்களில் நடித்துக் கிடைத்த புகழைவிட 100 நாட்கள் நடைபெற்ற ‘பிக்பாஸ்’ மூலம் பட்டிதொட்டியெங்கும்...
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த...
‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன், முதன் முதலாக ஒரு நேரடி தமிழ் படத்தில்...