கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் நமது இணையதளத்தில் செய்தியை வெளியிட்டிருந்தோம். தனுஷும், கௌதம் மேனனும் முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி விட்டது! எப்போதுமே தான் இயக்கும் படங்களுக்கு தூய தமிழில் பெயர்களை சூட்டி வரும் கௌதம் மேனன் இப்படத்திற்கு ‘யெனை நோக்கி பாயும் தோட்ட’ என்ற தலைப்பை வைத்துள்ளார். இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ நிறுவனம் சார்பில் மதன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார், யார் இசை அமைக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘மிரட்டு’ மற்றும் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கொடி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. அதைப்போல சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்கும் ‘அச்சம் எனபது மடமையடா’ படத்தின் இறுதிகட்ட வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...