100 ஏக்கர் பிரம்மாண்ட செட்டில் விக்ரமின் ‘கருடா’

100 ஏக்கர் பிரம்மாண்ட செட்டில் விக்ரமின் ‘கருடா’

செய்திகள் 14-Mar-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘இரு முகன்’ படத்தில் நடித்து வருவதோடு விக்ரம் அடுத்து திரு இயக்கத்தில் ‘கருடா’ என்ற படத்தில் நடிக்கவும் ஆயத்தமாகி வருகிறார்! ‘சில்வர்லைன் ஃபிலிம் பேக்டரி’ என்ற பட நிறுவனம் தயரிக்கும் ‘கருடா’வில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிரார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னையில் துவகும் படப்பிடிப்பு தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு இடத்திலும் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஸ்ரீபெரும்புதூரில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களை தொடர்ந்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ மற்றும் அரபு நாடுகளிலும் ‘கருடா’ படமாகவிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் கோவை மாவட்டத்து பெண்ணாக நடிக்கிறார். விக்ரம், காஜல் அகர்வால முதன் முதலாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு கிரிநந்த் இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்ப்திவு செய்கிறார். இது திரு இயக்கும் 5-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;