இளையராஜாவுக்கு 100 ஓவியர்கள் இணைந்து மரியாதை

இளையராஜாவுக்கு 100 ஓவியர்கள் இணைந்து மரியாதை

செய்திகள் 12-Mar-2016 2:44 PM IST VRC கருத்துக்கள்

இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 100 ஓவியர்கள் இணைந்து வரையும் நிகழ்வு சென்னை லயோலா கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், நாசர், Father Raja Nayagam , பொன்வண்ணன், இயக்குநர் பா.ரஞ்சித் கலை இயக்குனர் மணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவை நடிகர் விஜய்சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து துவக்கி வைத்தார். இவ்விழாவின் தனி சிறப்பு என்னவென்றால் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் அனைவரும் ஓவியம் வரைந்தது தான். அத்துடன் இயக்குநர் பா.ரஞ்சித் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தது தனி சிறப்பாகும். இவ்விழா நாளையும் தொடரும். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இந்த ஓவியங்கள் அனைத்தும் விரைவில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதற்க்கு அடுத்தகட்டமாக இந்த 100 ஓவியங்கள் அனைத்தும் புத்தகங்களாகவும் வெளியிடப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;