சிபிராஜின் அடுத்த படம்?

சிபிராஜின் அடுத்த படம்?

செய்திகள் 12-Mar-2016 12:12 PM IST VRC கருத்துக்கள்

ஜீவாவுடன் ‘போக்கிரி ராஜா’ படத்தில் வில்லனாக நடித்து அசத்திய சிபிராஜ் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘ஜாக்‌சன் துரை. இறுதிகட்ட வேலைகளில் இருக்கும் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராமின் உதவியாளர் ஆர்.மணிகண்டன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சிபிராஜ். ‘Wind Chims Medias Entertainment’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், சிங்கம் புலி, ‘மைம்’ கோபி, திருமுருகன் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆர்மபமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;