மாப்ள சிங்கம் – விமர்சனம்

ஜாலியானவன்!

விமர்சனம் 12-Mar-2016 11:33 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Rajasekhar
Production : Escape Artists Motion Pictures
Starring : Vimal, Anjali, Soori
Music : N. R. Raghunanthan
Cinematography : V.S. Tharun Balaji
Editing : Vivek Harshan

இயக்குனர் எழிலின் உதவியாளர் ராஜசேகர் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ‘மாப்ள சிங்கம்’ எப்படி?

கதைக்களம்

தேனி மாவட்டத்தில் இருக்கும் ராதாரவி குடும்பத்தினருக்கும், ராமதாஸ் (முனிஸ்காந்த்) குடும்பத்தினருக்கும் சேர்மேன் பதவி, தேர் திருவிழாவில் தேர் இழுப்பது போன்ற பல விஷயங்களில் காலங்காலமாக பகை இருந்து வருகிறது. இந்நிலையில் சேர்மேனாக இருக்கும் ராதாரவியின் தம்பி மகன் விமல், ராமதாஸின் மருமகள் அஞ்சலியை காதலிக்கிறார். அதைப்போல ராதாரவியின் மகள் மதுபாலா, அஞ்சலியின் அண்ணன் விஷ்ணுவை காதலிக்கிறார். இந்நிலையில் விஷ்ணுவும், மதுபாலாவும் ஊரைவிட்டு ஓடிச்சென்றுவிட்டார்கள் என்ற ஒரு தகவல் ஊர் முழுக்க பரவ, இரு குடுமபத்தாருக்கும் இடையிலான பகை மேலும் முற்றுகிறது. இதனால் விமல், அஞ்சலி காதலிலும் விரிசல் விழுகிறது! இந்நேரத்தில் ஊரில் சேர்மேன் தேர்தல் வர, ராதாரவி தனக்கு பதிலாக விமலை தேர்தலில் நிற்க வைக்கிறார். அதைப்போல ராமதாஸ், வழக்கறிஞரான அஞ்சலியை நிற்க வைக்கிறார். தேரதலில் யார் வெற்றி பெற்றார்? விமல், அஞ்சலி மற்றும் விஷ்ணு, மதுபாலா ஆகியோரின் காதல் கை கூடியதா? என்பதே ‘மாப்ள சிங்கம்’.

படம் பற்றிய அலசல்!

வழக்கமாக கிராமங்களில் நடக்கும் பதவி, ஜாதி, கௌரவ பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இயக்குனர் ராஜசேகர் இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றாலும் அதை இரண்டே கால் மணி நேரம் (சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும்) போரடிக்க வைக்காமல் இயக்கியமைக்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்! வெள்ளைக்கார இளைஞர் ஒருவரை தாநாயகன் விமலின் நண்பர்களில் ஒருவராக படம் முழுக்க நடிக்க வைத்து, கடைசியில் இயக்குனர் அந்த கேரக்டருக்கான விளக்கத்தை தந்திருப்பது அருமை! கதையில் ஏகபட்ட உறவு முறை கேர்கடர்கள் இருப்பதால் அது படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றாலும். படம் நெடுக வரும் சூரி, காளி வெங்கட், அந்த வெள்ளைகார இளைஞர், சாமிநாதன், ராமதாஸ் ஆகியோரின் காமெடி காட்சிகள் எல்லாத்தையும் மறக்கடிக்க செய்கிறது. தருண் பாலாஜியின் ஒளிப்பதிவில் தேனி மாவட்டத்தின் இயற்கை அழகை மேலும் ரசிக்க முடிகிறது. ரகுநந்தனின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை! பின்னணி இசையும் கவனம் பெறுகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

‘நமக்கு இந்த ரூட் தான் பெஸ்ட்’ என்ற வகையில் இப்படத்திலும் விமல் ஒரு கிராமத்து இளைஞனாக வலம் வந்து அலட்டல் இல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்! வழக்கறிஞராக வரும் அஞ்சலி, கிளாமருக்கு இடம் கொடுக்காமல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘ஆஃபீஸ்’ தொடர் புகழ் விஷ்ணு, மதுபாலா ஜோடியும் மனதில் நிற்கிறார்கள். விமலின் நண்பர்களாக வரும் சூரி, காளிவெங்கட், பெரியப்பாவாக வரும் ராதாரவி, மாமாவாக வரும் சாமிநாதன், அஞ்சலியின் மாமாவாக வரும் ராமதாஸ் என எல்லோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1.ஜாலியாக செல்லும் திரைக்கதை
2.கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்பு
3.காமெடி, பாடல்கள்

பலவீனம்

1.குழுப்பத்தை ஏற்படுத்தும் அதிகபடியான கேர்கடர்கள்
2.சில லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்

கதையில் புதுமை இல்லை என்றாலும் ஜாலியாக பொழுதை கழிக்க விரும்புவோருக்கு ஏற்ற படம் ‘மாப்ள சிங்கம்’.

ஒருவரி பஞ்ச் : ஜாலியானவன்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;