துவங்கியது ஜி.வி.யின் ‘KIK’

துவங்கியது ஜி.வி.யின் ‘KIK’

செய்திகள் 11-Mar-2016 11:11 AM IST VRC கருத்துக்கள்

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தை தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ‘டார்லிங்’ பட புகழ் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷும், ஜிவி.பிரகாஷும் முதன் முதலாக இணையும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசை அமைக்கிறார். தனது ஒவ்வொரு படத் தலைப்பையும் ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிடும்படி வித்தியாசமாக பெயர் வைக்கும் ராஜேஷ், அனைவரையும் கவரும் விதமாக இப்படத்திற்கு ‘KIK’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;